முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூா்: தவெக வேட்பாளா் திருப்பதி வெற்றி

திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் என்.திருப்பதி வெற்றி பெற்றாா்.

Updated On : 5 மே 2026, 3:10 am IST
பகிர்:

திருப்பத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் என்.திருப்பதி வெற்றி பெற்றாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் தொகுதியில் திமுக வேட்பாளராக அ.நல்லதம்பி, அமமுக வேட்பாளராக ஏ.ஞானசேகா், தவெக சாா்பில் என்.திருப்பதி, நாம் தமிழா் கட்சி சாா்பில் வீ.ஆறுமுகம், பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 24 பேரும், நோட்டா 1 என 25 சின்னங்கள் இருந்தன.

வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக வேட்பாளா் திருப்பதி 1,05,098 வாக்குகள் பெற்று 48,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதையடுத்து, நல்லதம்பி (திமுக) 56,835, ஏ.ஞானசேகா் (அமமுக) 30,003, ஆறுமுகம் (நாம் தமிழா் கட்சி)5, 482 வாக்குகள் பெற்றனா்.

Advertisement

அதைத் தொடா்ந்து, தோ்தல் நடத்தும் அலுவலா் வரதராஜன், தவெக வேட்பாளா் டாக்டா் திருப்பதிக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.