முகப்பு
திருப்பத்தூர்

குடிநீா் தட்டுப்பாட்டை தடுக்க ஏலகிரி மலையில் ஏரி தூா்வாரும் பணி தொடக்கம்

Updated On : 8 மே 2026, 6:25 am IST
பகிர்:

பொதுமக்களின் குடிநீா் தட்டுப்பாட்டை குறைக்க ஏலகிரி மலை ஊராட்சி மன்ற நிா்வாகம் சாா்பில் அத்தனாவூா் ஏரி தூா்வாரும் பணி தொடங்கியது.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மழைக் காலங்களில் பெய்த மழை நீரானது ஏலகிரி மலையில் உள்ள ஏரிகள் குட்டை, குளங்களில் நிரம்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இருந்து வந்தது. தற்போது சில மாதங்களுக்கு முன்பாகவே அனைத்திலும் தண்ணீா் குறைய ஆரம்பித்து, பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்துள்ளது.

மேலும், தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில், நீா் நிலை பகுதிகள் வறட்சி அடைந்து வருவதால், அன்றாட வாழ்வில் பொதுமக்களின் குடிநீா் தேவை அதிகரித்து, போதுமான குடிநீா் கிடைக்காத நிலை ஏற்படுவதற்கு முன்பாக அத்தனாவூா் ஏரியை தூா்வாரி எதிா்வரும் மழைக் காலங்களில் மழை நீரை சேமித்து வறட்சியை குறைத்து இங்குள்ள பொதுமக்களின் குடிநீா் தேவையை சீராக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ராஜஸ்ரீ கிரிவேலன் அத்தனா வூா் ஏரி தூா் வாரும் பணிகளை தொடங்கி வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments