முகப்பு
திருவள்ளூர்

ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி:புகாருக்கு தொடர்பு கொள்ள...

தமிழக அரசின் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெறுவதில் சிரமம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 13 மே 2013, 12:29 am IST
பகிர்:

தமிழக அரசின் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் கீழ் அரிசி பெறுவதில் சிரமம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சிறப்பு அங்காடிகளில் ரூ.20-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யப்பட்டு

Advertisement

Advertisement

வருகிறது.

திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவுப் பண்டகச்சாலை, திருத்தணி ஸ்ரீசுப்பிரமணியசாமி கூட்டுறவுப் பண்டகச் சாலை, பொதட்டூர்பேட்டை கூட்டுறவுப் பண்டகச்சாலை மற்றும் பூந்தமல்லி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் இந்த அரிசி விற்பனை நடைபெற்று வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரிசி கிடைப்பதில் சிரமம் ஏதும் ஏற்பட்டால் 2766 2622 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.