முகப்பு
திருவள்ளூர்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்:   ஆட்சியர் வழங்கினார்

பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முஸ்லீம் பெண்கள் சுயதொழில்  தொடங்க  ரூ.1.41 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை வழங்கினார்.

Updated On : 24 ஜூலை 2018, 12:41 am IST
பகிர்:

பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முஸ்லீம் பெண்கள் சுயதொழில்  தொடங்க  ரூ.1.41 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை ஆட்சியர் எ.சுந்தரவல்லி திங்கள்கிழமை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் எ.சுந்தரவல்லி தலைமை வகித்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். இதில், நிலம் சம்பந்தமாக-93,  சமூக பாதுகாப்பு திட்டம்-60, சமூக நலத்திட்டம்-7, வேளாண்மை கால்நடைத்துறை மற்றும் மீன்வளம்-1,  ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலம்-3, வேலைவாய்ப்பு-34, சட்டம் மற்றும் ஒழுங்கு-20, இதர துறைகள்-45 மற்றும் பல்வேறு துறைகளின் மனுக்கள் உள்பட மொத்தம் 301 மனுக்கள் பெறப்பட்டன.  
அதைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வாயிலாக மாவட்ட இஸ்லாமிய மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 21 இஸ்லாமிய மகளிருக்கு சுயதொழில் தொடங்தக ரூ. 1.41 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைக்கான காசோலைகளையும் ஆட்சியர் வழங்கினார். 
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் து.சந்திரன், தனித்துறை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரஞ்சித், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஆர்.ரூபன்தாஸ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments