பெண்ணை தாக்கி 7 பவுன் நகை பறிப்பு
பொன்னேரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி அருகே, மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கிலிமேடு பகுதியில் வசித்து வருபவர் சுஜாதா(35). இவரது மகள் வைஷ்ணவி(4). இவர் வேண்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வருகிறார். சுஜாதா திங்கள்கிழமை தனது மகளை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது, தடப்பெரும்பாக்கம் அருகே வந்தபோது, இரண்டு இளைஞர்கள், சுஜாதாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளனர். இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சுஜாதா மற்றும் அவரது மகள் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
அப்போது சுஜாதாவின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகையை இளைஞர்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். கீழே விழுந்ததில் காயமடைந்த சுஜாதாவும், அவரது மகளும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் பொன்னேரி போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதே போன்று, மீஞ்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுப்பேடு பகுதியில் வசித்து வரும் நந்தினியின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் நகையை பறித்துக் கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.