முன்விரோதத்தில் இருவருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் கைது
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டியது தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூர் அருகே மேல்நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசனின் மகன் தினேஷ்குமார்(20). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது உறவினர் மகன் ஹரிகிருஷ்ணனுடன் (22) கடை வீதிக்குச் சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (25) உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து தினேஷ்குமார், ஹரிகிருஷ்ணன் ஆகியோரைத் தாக்கி, கத்தியால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் இருவரும் பலத்த காயம்அடைந்தனர்.
அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹரிகிருஷ்ணன் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுதொடர்பாக மணவாளநகர் காவல் நிலையத்தில் தினேஷ்குமார் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், சஞ்சீவிராமன், மணிபாரதி, பாரத், சிவசங்கரன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.