திரைக்கதிர்
போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
'மேற்காசியாவில் நீடித்து வரும் நெருக்கடி நிலை இன்னும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் எரிசக்தி, வர்த்தகம், சரக்குப் போக்குவரத்து, பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் உலகளாவிய அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்தச் சுமை தவிர்க்க முடியாமல் தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள், திரையரங்குகள், விநியோகஸ்தர்கள், நிதியாளர்கள், முழு திரையுலகக் கட்டமைப்பின் மீதும் விழும். சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அந்தத் திரைப்படத்தின் தரத்திற்காக இருக்க வேண்டுமே தவிர, வெறும் ஆடம்பரத்துக்காக இருக்கக்கூடாது'' எனத் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் அண்மையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இயக்குநரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான செüந்தர்யா ரஜினிகாந்த் கலந்துகொண்டார். மாற்றுத்திறனாளிகளுக்குச் செயற்கைக் கால்களையும், பெண்களுக்கு வாழ்வாதாரத்துக்கான ஆட்டோக்களையும் வழங்கினார்.
Advertisement
Advertisement
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ' ரவுண்ட் டேபிள் அமைப்பின் உதவியோடு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, இந்த உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டுள்ளன. நல்லது செய்வதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம். தற்போதைக்குச் சேவை செய்யும் எண்ணத்தில் மட்டுமே நான் இங்கு வந்திருக்கிறேன். ஆனால், எதிர்காலத்தில் மக்கள் என்ன விரும்புகிறார்களோ, அதை நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து செய்து நிச்சயமாக நிறைவேற்றுவோம். இந்த மாத இறுதியில், நாங்கள் அடுத்து செய்யப்போகும் படம் குறித்து அறிவிப்போம் முதல்வர். சி. ஜோசப் விஜய் அண்ணாவின் இந்த வெற்றி மிக முக்கியமான ஒரு வரலாற்று வெற்றியாகும்!'' எனப் பேசியுள்ளார்.
கங்கை அமரன் எழுதியுள்ள 'உயிரிணையே' ஆல்பம் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதில் கலந்து கொண்டு பேசிய கங்கை அமரன், 'சிலர் மாதிரி இளையராஜா சாப்பாட்டுக்கு வழியில்லாமல் இருக்கிறார் என்பது போன்றவற்றை எல்லாம் எழுதுகிறார்கள். யுவன் ஷங்கர்ராஜா துபையில் செட்டில் ஆகிவிட்டார். கார்த்திக் ராஜா இளைய
ராஜாவுடன்தான் இருக்கிறார். அவரது மனைவிதான் அண்ணனுக்குச் சமைத்துக்கொடுக்கிறார். ஆனால், இளையராஜா அனாதை ஆகிவிட்டார் என்று ஏன் எழுதவேண்டும். இளையராஜாவை ஏன் இறக்குகிறீர்கள்.
50 ஆண்டுகள் நிலையாக நின்றிருக்கிறார். எங்களை நேசியுங்கள். இல்லாததை எழுதி, அவரைக் கேவலப்படுத்துவது கஷ்டமாக இருக்கிறது. இது சம்பந்தமாக உரிய நபரிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இளையராஜா தனிமையை நாடி இருக்கிறார். அவரை அவராக இருக்க விடுங்கள்'' என்று பேசியிருக்கிறார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் 'டான் 3' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து 'டான் 3' படத்தயாரிப்புக் குழு படத்தயாரிப்புக்குத் தேவையான வேலைகளில் இயக்குநர் பர்ஹான் அக்தர் ஈடுபட்டிருந்தார். ஆனால், திடீரென 'டான் 3' படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் ரன்வீர் சிங் அறிவித்துள்ளார். இதனால் தனக்கு பெரிய அளவில் இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாக இயக்குநர் பர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார். அதோடு இதற்காக ரன்வீர் சிங் தனக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பர்ஹான் அக்தர் தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரத்தில் நடிகர் ஆமீர்கான் உட்பட முன்னணி நடிகர்கள் சமரசப்பேச்சு
வார்த்தை நடத்திப்பார்த்தனர். ஆனால், இதில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. தற்போது ரன்வீர் சிங் மூலம் தனக்கு 45 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டு இருப்பதாகவும், அதனை ஈடுகட்ட ரன்வீர் சிங் ரூ. 45 கோடி கொடுக்க வேண்டும் என்றும் பர்ஹான் அக்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.