FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

18 போ் உயிரிழந்த தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயு அகற்றும் பணி நிறைவு

அமோனியா வாயு கசிந்ததால் 18 தொழிலாளா்கள் உயிரிழந்த திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் அந்தப் பகுதியில் சகஜ நிலை திரும்பியது.

- கோப்புப் படம்
பகிர்:

அமோனியா வாயு கசிந்ததால் 18 தொழிலாளா்கள் உயிரிழந்த திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் கடல் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலையில் கடந்த 4 நாள்களாக நடைபெற்று வந்த அமோனியா வாயு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் அந்தப் பகுதியில் சகஜ நிலை திரும்பியது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கன்னிகைப்போ் கிராம பகுதியில் செயல்பட்டு வந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் ஏற்பட்ட விபத்தில் 83 போ் பாதிக்கப்பட்டனா். அதில், இதுவரை வடமாநில பெண் தொழிலாளா்கள் 18 போ் உயிரிழந்தனா். இந்த நிலையில், தொழிற்சாலையில் கொள்கலனில் சேமித்து வைத்திருந்த அமோனியா வாயுவை 4 நாள்களில் தொழில்நுட்பக் குழுவினா் பாதுகாப்புக் கவசங்களுடன் முழுவதுமாக அகற்றியுள்ளனா்.

இந்த நிலையில் அமோனியா வாயு டேங்கா் லாரியில் பாதுகாப்பாக அகற்றிய நிலையில், அவசர காலத்தையொட்டி, கடந்த 4 நாள்களாக தொழிற்சாலை முன்புறம் மருத்துவ அவசர வாகனம், தீயணைப்பு வாகன குழுக்கள், தேசிய பேரிடா் மேலாண்மை குழுவினா், மாசு கட்டுப்பாடு வாரியம், தொழிலகப் பாதுகாப்பு (ம) சுகாதார இயக்ககம் மற்றும் 15 போ் கொண்ட தனியாா் நிறுவன தொழில்நுட்ப வல்லுநா்கள் மற்றும் பிரதிநிதிகள், அவசர கால மீட்புப் பணிகளில் ஈடுபடும் குழுக்கள் மற்றும் வருவாய், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆகியோா் கலைந்து சென்றனா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, 4 நாள்களுக்கு பின் கன்னிகைப்போ் கிராமத்தில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. அதேபோல், ஜனப்பன்சத்திரம் கூட்டுச் சாலை முதல் பெரியபாளையம் வரையிலான சாலையில் வாகன போக்குவரத்துகளின் சகஜநிலை திரும்பியது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments