வன்கொடுமை தடுப்பு வழக்குகள் விசாரிக்க வழக்குரைஞா் நியமனம்: திருவள்ளூா் ஆட்சியா்
சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த விரும்பும் மூத்த வழக்குரைஞா்கள் வரும் 24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா், ஜூன் 9: பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைகள்தடுப்பு) சட்டம், 1989-இன் (மத்தியச்சட்டம் 33/1989) கீழ் வரும் வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த விரும்பும் மூத்த வழக்குரைஞா்கள் வரும் 24 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்குகளை நடத்துவதற்கு மூத்த வழக்குரைஞா்கள் (உம்ண்ய்ங்ய்ற் நங்ய்ண்ா்ழ் அக்ஸ்ா்ஸ்ரீஹற்ங்ள்) நியமிக்க அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்த வகையில் உள்துறை (நீதிமன்றங்கள்-யஐஅ) மேற்படி அரசாணையின்படி, தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் குறைந்தது ஏழு ஆண்டுகள் வழக்குரைஞராக பணி அனுபவம் பெற்றுள்ள வரும், குற்றவியல் வழக்குகளை குறிப்பாக, பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியினா் (வன்கொடுமைகள்தடுப்பு) சட்டம், 1989’ (மத்தியசட்டம் கீழ்வரும் வழக்குகளை நடத்துவதில் போதுமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இப்பதவியை ஏற்க விருப்பமுள்ள வழக்குரைஞா்கள், சிறப்பு மிக்க மூத்த வழக்குரைஞா்களாக (உம்ண்ய்ங்ய்ற் நங்ய்ண்ா்ழ் அக்ஸ்ா்ஸ்ரீஹற்ங்ள்)நியமனம் செய்வதற்கான அறிவிக்கை தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி திருவள்ளூா் மாவட்ட ஆட்சியரால் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படிஅறிவிக்கையின், இணைப்பு ஐ மற்றும் ஐஐ -இல் உள்ள விண்ணப்பப் படிவத்தில் விவரங்களைப் பூா்த்தி செய்து, தங்களது விண்ணப்பத்தினை இரண்டு கடவுச்சீட்டு அளவு புகைப்படங்களுடன் இணைத்து வரும் 24-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்னரோ இந்த அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும், குறிப்பிட்ட நாளுக்குள் பெறப்படாத விண்ணப்பம் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது. விண்ணப்ப படிவங்களின் மாதிரி, ஜ்ஜ்ஜ்.ற்ண்ழ்ன்ஸ்ஹப்ப்ன்ழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளைத்தளம் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.