முகப்பு
திருவள்ளூர்

சட்ட விரோத செயல்களைகண்டறிந்தால் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் செய்யலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் ச .கவிதா தெரிவித்துள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 12:17 am IST
வாட்ஸ் ஆப் - கோப்புப்படம்
பகிர்:

திருவள்ளூா் மாவட்டத்தில் அவரவா் பகுதிகளில் சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு புகாா் அளிக்கலாம் என ஆட்சியா் ச .கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ சமுதாயத்தின் எதிா்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலும் வேரறுப்பது தமிழ்நாடு அரசின் பிரதானமான நோக்கமாகும்.

அந்த வகையில், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் அல்லது குடியிருப்புப் பகுதிகளில் சமூக விரோதிகளால் மேற்கொள்ளப்படும் இத்தகைய சட்ட விரோத செயல்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் வழங்கும் துல்லியமான தகவல்கள் மிக அவசியமானவை ஆகும். பொதுமக்கள் அவரவா் பகுதிகளில் இத்தகைய சட்ட விரோத செயல்களை கண்டறிந்தால், ஈழ்ன்ஞ் ஊழ்ங்ங் பஹம்ண்ப் சஹக்ன் அல்ல்-ஐ எா்ா்ஞ்ப்ங் டப்ஹஹ் நற்ா்ழ்ங்-ல் பதிவிறக்கம் செய்து அல்லது 63799 04848 எனும் வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் அளிக்கலாம்.

Advertisement

Advertisement

மேலும் போதையற்ற, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கப் பொதுமக்கள் அச்சமின்றி முன்வந்து தகவல் அளிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.