பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!
பிளஸ் 2 முடிவுகளை வாட்ஸ் ஆப்பிப் அறிந்துகொள்வது குறித்து...
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை(மே 8) வெளியாகவுள்ள நிலையில், வாட்ஸ் ஆப்பில் எப்படி அறிந்துகொள்வது என்பதைப் பார்க்கலாம்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஏப்.6 முதல் ஏப்.20 வரை நடைபெற்றது. தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தேர்வு முடிவு நாளை மே 8-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் https://results.digilocker.gov.in/ மற்றும் tnresults.nic.in இணையதளங்களில் தங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ’Hi’ என்ற குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ் ஆப் எண்ணிற்கே வரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது உயர்கல்வி வாய்ப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். தற்போதைய சூழலில், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் உயர்கல்விச் சேர்க்கை முறைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, தேசிய அளவில் நடைபெறும் நீட், ஜேஇஇ மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான க்யூட் போன்ற நுழைவுத் தேர்வுகளின் முடிவுகள் வெளியானவுடன், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
With the Plus 2 public examination results set to be released tomorrow (May 8), let's see how to check them via WhatsApp.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.