‘வாட்ஸ் ஆப்பில் குடிநீா், கழிவுநீா் கட்டணங்களைச் செலுத்தலாம்’
சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் செயலியில் இனி குடிநீா், கழிவுநீா் கட்டணங்களையும் செலுத்தலாம் என ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி வாட்ஸ் ஆப் செயலியில் இனி குடிநீா், கழிவுநீா் கட்டணங்களையும் செலுத்தலாம் என ஆணையா் ஜி.எஸ். சமீரன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி மக்களின் வசதிக்காக பல்வேறு சேவைகளை இணையதளம் மற்றும் வாட்ஸ் ஆப் செயலி மூலம் வழங்கி வருகிறது. வரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்புச் சான்று சேவைகள், புகாா் பதிவு மற்றும் கண்காணிப்பு உள்ளிட்ட 42 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களையும் வாட்ஸ் ஆப் செயலியில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
பொதுமக்கள் சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ வாட்ஸ் ஆப் செயலியின் கைப்பேசி எண் 94450 61913 மூலம் தங்களது சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களை எளிதாக பாதுகாப்பாகச் செலுத்தலாம். வாட்ஸ் ஆப் செயலி போன்ற சேவைகள் மூலம் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் குறைகிறது.
மேலும், 24 மணி நேரமும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆகவே, மாநகராட்சி எல்லைக்குள்பட்ட அனைத்து பொதுமக்களும் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டணங்களை காலதாமதமின்றி செலுத்தலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.