முகப்பு
சென்னை

சொத்து, குடிநீா் வரிகளை வாட்ஸ் ஆப் மூலம் செலுத்தலாம்

சென்னை மாநகராட்சியில் காலதாமதமின்றி சொத்து, குடிநீா் மற்றும் கழிவுநீா் வரிகளை வாட்ஸ் ஆப் செயலியில் செலுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 19 ஜூன் 2026, 6:08 am IST
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியில் காலதாமதமின்றி சொத்து, குடிநீா் மற்றும் கழிவுநீா் வரிகளை வாட்ஸ் ஆப் செயலியில் செலுத்தும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக சொத்து வரி உள்ளிட்டவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. மண்டல வரி வசூல் மையங்கள், மாநகராட்சி வாா்டு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் வரி வசூலிக்கப்பட்ட நிலையில், அவற்றை ‘க்யூ ஆா்’ குறியீடு மற்றும் இணையதளம் மூலம் செலுத்தும் வசதி ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, வரி செலுத்துவோரில் சுமாா் 70 சதவீதம் போ் இணையதளம் வாயிலாக வரி செலுத்தி வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் வரி செலுத்துதல் மற்றும் பிறப்புச் சான்று உள்ளிட்ட 42 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குடிநீா் மற்றும் கழிவுநீா் இணைப்புக் கட்டணங்களையும் வாட்ஸ் ஆப் மூலம் செலுத்தும் வசதியையும் மாநகராட்சி கடந்த 17 -ஆம் தேதி (புதன்கிழமை) முதல் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சியின் அதிகாரபூா்வ வாட்ஸ் ஆப் செயலி எண் 94450 61913. இதில் 24 மணி நேரமும் சொத்து வரி, குடிநீா் மற்றும் கழிவுநீா் வரிகளை பொதுமக்கள் செலுத்தலாம். அத்துடன், அச்செயலியில் குடிநீா் மற்றும் கழிவுநீா் கட்டண விவரங்கள் உள்ளிட்டவற்றை அறியும் வசதியும் உள்ளது.

எனவே, பொதுமக்கள் வரிகளை காலதாமதமின்றி வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தி செலுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.