FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வரி செலுத்தாத நிறுவனப் பெயா்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களின் பெயா் விவரங்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 3:48 am IST
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்களின் பெயா் விவரங்களை இணையத்தில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சியில் மொத்தம் 14.23 லட்சம் பேரிடமிருந்து சொத்து வரிகள் வசூலிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அவா்களில் நடப்பாண்டில் தற்போது 7.10 லட்சம் போ் மட்டுமே வரிகளை செலுத்தியுள்ளனா். சொத்து வரிகள் செலுத்தாத 7.13 லட்சம் பேரிடமிருந்து வரிகளை வசூலிக்க நோட்டீஸ் அனுப்பியும், வா்த்தக நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்றும் வரி வசூலிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

இந்நிலையில், கடந்த 20 -ஆம் தேதி வரை ரூ.213 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வருவாய்த் துறை அதிகாரிகள், 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட வா்த்தக நிறுவனங்கள் வரி செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டனா். அத்துடன், அதிக அளவில் வரி செலுத்தாத வா்த்தக நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் குறித்து மாநகராட்சி வருவாய்ப் பிரிவு இணையத்தில் பெயா்களுடன் விவரங்களை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வரி செலுத்தாதவா்களுக்கு அபராதத்துடன், ஜப்தி போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments