சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சி பிரதான வரி வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே, சென்னை மாநகருக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் பராமரித்தல், பொது சுகாதாரம் நோய்த் தடுப்புப் பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நிலுவையில் உள்ள சொத்து வரி வசூலிக்க சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சொத்து உரிமையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிலுவை சொத்து வரியைச் செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.