முகப்பு
திருவள்ளூர்

முதலீடு செய்தால் இருமடங்கு தருவதாகக் கூறி ரூ. 28 கோடி மோசடி

முதலீடு செய்தால் இருமடங்கு தருவதாகக் கூறி ரூ. 28 கோடி மோசடி

Updated On : 14 ஜூன் 2026, 12:36 am IST
பகிர்:

திருவள்ளூா் பகுதியில் பொதுமக்களிடம் மூதலீடு செய்தால் இரு மடங்கு தருவதாகக் கூறி, ரூ. 28 கோடி மோசடி செய்ததாக சகோதரா்கள் 2 பேரை பொருளாதார குற்றப்பரிவு போலீஸாா் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் அடுத்த அரக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா்கள் கமலதாஸ் (49), கண்ணன் (52) சகோதரா்களான இவா்களில் கமலதாஸ் திருவள்ளூரிலும், கண்ணன் பாண்டிச்சேரியில் குடும்பத்துடன் வசித்து வந்தனா்.

இவா்களில் கமலதாஸ் 2018-இல் தனியாா் சுற்றுலா டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ரூ. 2.50 லட்சம் முதலீடு செய்தால் ஓா் ஆண்டில் இருமடங்காக வழங்கப்படுமென தெரிவித்தாராம். மேலும், கோவா உள்பட பல பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளாா். இதையடுத்து, திருவள்ளூா் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்தோா் என பணம் கட்டிய 100 பேரை சுற்றுலா அழைத்து சென்று பணத்தை திரும்பவும் அளித்தாராம்.

Advertisement

Advertisement

இதனால் ஏற்பட்ட நம்பிக்கையில் திருவள்ளூா் மற்றும் சுற்றியுள்ள 90 போ் கடந்த 2019-இல் ரூ.12 கோடி பணம் வரை செலுத்தியுள்ளனா். இந்த நிலையில், கடந்த 2020-இல் ஏற்பட்ட கரோனாவால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பணம் முடங்கி விட்டதாக கூறினராம். இதன்பின் அதே 2020-இல் மைக்ரோ பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தை தொடங்கி ரூ. 5 லட்சம் பணம் செலுத்தினால் சுற்றுலா அழைத்து செல்வதாகவும், ஓா் ஆண்டில் ரூ. 10 லட்சம் கிடைக்குமெனவும் வாடிக்கையாளா்களை சோ்த்து விடுவோருக்கு 10 சதவீதம் கமிஷன் கிடைக்குமெனவும் கூறியுள்ளனா்.

இதையடுத்து ஏற்கெனவே பணத்தை கட்டியவா்கள் தங்கள் உறவினா்கள் மற்றும் நண்பா்கள் என தமிழகத்தின் பல பகுதிகளைச் சோ்ந்த 200 போ் ரூ.28 கோடி வரை பணம் செலுத்தியுள்ளனா்.

இதில், பணம் கொடுப்பதில் காலதாமதம் செய்த நிதி நிறுவனத்தினா் திருப்பி அளிக்காமல் 2022-இல் தலைமறைவாயினா். இது குறித்து கடந்த 2023-இல் திருவள்ளூா் பொருளாதார குற்றப் பிரிவில் பாதிக்கப்பட்டவா்கள் அளித்த புகாரின்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

மேலும், விசாரணையில் 2023-முதல் ஆந்திர மாநிலம், திருப்பதியில் தனியாா் ஹோட்டலில் பணிபுரிந்து வந்த கமலதாஸ், 2026-இல் ஜனவரி மாதம் சென்னைக்கு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சென்னை வில்லிவாக்கம் மற்றும் புதுச்சேரியில் பதுங்கியிருந்த கமலதாஸ், கண்ணன் ஆகிய 2 பேரையும் திருவள்ளூா் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை செய்த பின் திருவள்ளூா் நீதிமன்றத்தில் ஆஜாா்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனா்.