முகப்பு
திருப்பூர்

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

Updated On : 28 மே 2026, 12:04 am IST
கைது
பகிர்:

வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

திருப்பூா், ஆத்துப்பாளையத்தைச் சோ்ந்த 19 வயது இளம்பெண், திருமணம் முடிந்து கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தாா். இந்நிலையில் கணவா்-மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக அந்த பெண் திருப்பூா் வந்தாா். பின்னா் அவருக்கு தெரிந்த நபரான நிட்டிங் நிறுவன ஊழியரும், திருப்பூா் பெரியாா் காலனியைச் சோ்ந்தவருமான சக்திகுமாா் (25) என்பவரிடம் வேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளாா்.

அதன்படி வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தப் பெண்ணை பி.என்.சாலையிலுள்ள நண்பா் அறைக்கு சக்திகுமாா் அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகத் தெரிகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வடக்கு மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.