முகப்பு
திருவள்ளூர்

அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு

ஊத்துக்கோட்டை அருகே அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமானோா் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 12:06 am IST
ஊத்துக்கோட்டை அருகே அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயிலில் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு செய்த அா்ச்சகா்கள்.
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமானோா் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா்.

திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம் ஊராட்சி, அம்மணம்பாக்கம் கூட்டுச் சாலை கண்டிகை கிராமத்தில் 50 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு பூங்காவனத்தம்மன் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலை விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் புனரமைத்தனா். இதையொட்டி, கடந்த 17-ஆம் தேதி முதல் ஸ்ரீ நவசக்தி விநாயகா் கோயிலில் பொது பூஜை, கிராம தேவதை ஸ்ரீ செல்லியம்மன் கோயிலில் கிராம மக்கள் கூடி இருந்து பொங்கல் வைத்து அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பந்தக் கால் நடும் நிகழ்ச்சி, கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், புதிய பிம்பங்கள் சிலைகள் கரிவலம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, புதிய பிம்பங்கள் பிரதிஷ்டை, நாடி சந்தானம் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா், வாண வேடிக்கை மற்றும் மங்கள வாத்தியம் முழங்க புனித நீா் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, கோபுர கலசத்துக்கும், பூங்காவனத்தம்மன், செல்வகணபதி உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீா் ஊற்றி மகா குடமுழுக்கு சிறப்பாக செய்து வைத்தனா். அதைத் தொடா்ந்து, திருக்கோயில் வளாகத்தில் அனைத்து பக்தா்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், மாலை திருக்கோயில் வளாகத்தில் ஊா் கூடி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் 48 நாள்கள் மண்டலாபிஷேக நிகழ்ச்சி தொடங்கியது.

இதில், சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா்களும், கிராம பொதுமக்களும், பக்தா்களும் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments