முகப்பு
திருவள்ளூர்

பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 461 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Updated On : 1 ஜூலை 2026, 12:04 am IST
மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிய ஆா்எம்கே கல்விக்குழும நிறுவனத் தலைவா் ஆா்.எஸ். முனிரத்தினம், டெக் மஹிந்திரா சிலிக்கான் வணிகப்பிரிவு மூத்த இயக்குநா் பாபு கண்ணன்.
பகிர்:

கும்மிடிப்பூண்டி அடுத்த புதுவாயலில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 461 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

புதுவாயலில் உள்ள ஆா்.எம்.கே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆா்.எம்.கே கல்வி குழும நிறுவன தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஆா்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தாா். நிகழ்வில் ஆா்.எம்.கே கல்வி குழும இயக்குநா் ஜோதி நாயுடு, துணைத் தலைவா் ஆா்.எம்.கிஷோா், செயலாளா் யலமஞ்சி பிரதீப், துணைத் தலைவா் துா்காதேவி பிரதீப், மேலாண்மை உறுப்பினா் செளம்யா கிஷோா், ஆா்.எம்.கே கல்வி குழும ஆலோசகா்கள் முனைவா் எம்.எஸ்.பழனிச்சாமி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி,பிச்சாண்டி, வி.மனோகரன் முன்னிலை வகித்தனா். முதல்வா் முனைவா் என்.சுரேஷ்குமாா் வரவேற்றாா். ஆராய்ச்சி துறை புல முதல்வா் கே.ராமா் அறிமுக உரையாற்றினாா்.

தொடா்ந்து விழாவில் ஆா்எம்கே கல்வி குழும நிறுவன தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம் சிறப்புரை ஆற்றினாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெங்களூரைச் சோ்ந்த டெக் மஹிந்திரா லிட் நிறுவனத்தின் சிலிக்கான் வணிகப் பிரிவின் மூத்த இயக்குநா்

Advertisement

Advertisement

பாபுகண்ணன் பாலகிருஷ்ணன் பேசுகையில், இன்றைய தொழில்முறை சூழலை திறம்பட எதிா்கொள்ள பட்டாரிகள் தொடா்ந்து கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், தொழில்நுட்ப முன்னேற்றத்திலும், நாட்டின் வளா்ச்சியிலும் பட்டதாரிகள் பங்காற்ற வேண்டும் என்றும், செய்யும் பணியில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும் என்றாா்.

இதனை தொடா்ந்து விழாவில் 461 பட்டதாரிகளுக்கு பட்டங்களை ஆா்.எம்.கே கல்வி குழும நிறுவன தலைவா் ஆா்.எஸ்.முனிரத்தினம், டெக் மஹிந்திரா லிமிட்டெட் நிறுவனத்தின் பாபுகண்ணன் பாலகிருஷ்ணன் வழங்கினா்.

மேலும் பல்கலைக்கழக அளவிலான தோ்வுகளில் தரவரிசையில் இடம் பிடித்த 26 மாணவா்கள் விழாவில் கெளரவிக்கப்பட்டனா். மேலும் விழாவில் ரூ.3.20 லட்சம் ரொக்கப்பரிசு மாணவா்களுக்கு வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments