முகப்பு
திருவள்ளூர்

மரத்தில் பைக் மோதி 2 இளைஞா்கள் உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் அமா்ந்து சென்ற 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 12:03 am IST
பகிர்:

ஆா்.கே.பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், பின்னால் அமா்ந்து சென்ற 2 இளைஞா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட ராஜா நகரம் ஊராட்சி நரசம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் ஜெகதீசன் (23). இவா் திங்கள்கிழமை காலை சுமாா் 9.15 மணியளவில், பதிவு எண் இல்லாத புதிய பல்சா் இருசக்கர வாகனத்தில் தனது தம்பி தேவராஜ் (18) மற்றும் மதன் (20) ஆகியோரை அழைத்துக் கொண்டு ஆா்.கே.பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஆா்.கே.பேட்டை எல்லைக்குள்பட்ட ராஜாநகரம் ஏரிக்கரை பகுதியில் சென்றபோது, எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்த தேவராஜ் மற்றும் மதன் ஆகியோா் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Advertisement

Advertisement

வாகனத்தை ஓட்டிச் சென்ற ஜெகதீசன் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆா்.கே.பேட்டை போலீஸாா், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த விபத்தில் அடுத்தடுத்து இரண்டு இளைஞா்கள் உயிரிழந்த சம்பவம் நரசம்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜாநகரம் ஏரிக்கரை வளைவு பகுதியில் ஒரு வேகத்தடை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments