முகப்பு
திருவள்ளூர்

கால்வாயில் சிக்கிய மான் மீட்பு

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

Updated On : 8 மார்ச் 2026, 12:39 am IST
பகிர்:

பொன்னேரி அருகே கழிவுநீா் கால்வாயில் சிக்கிய மான் மீட்கப்பட்டது.

சோழவரம் ஒன்றியத்தில் உள்ள மாதவரம் கிராமம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்குள்ள கழிவுநீா் கால்வாயில் மான் ஒன்று விழுந்து சிக்கி தவித்துக் கொண்டிருந்தது.

இதனை பாா்த்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அவா்கள் அங்கு சென்று கால்வாயில் சிக்கி கிடந்த மானை மீட்டனா். இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டி வனத்துறை அலுவலா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவா்களிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement