முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே வயலில் இறந்துகிடந்த மான் மீட்பு

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயல்வெளியில் இறந்துகிடந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டனா்.

Updated On : 6 மே 2026, 12:59 am IST
செவலூரில் வயல்வெளியில் செவ்வாய்க்கிழமை இறந்துகிடந்த மான்.
பகிர்:

பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை வயல்வெளியில் இறந்துகிடந்த புள்ளிமானை வனத்துறையினா் மீட்டனா்.

பொன்னமராவதி அருகே உள்ள செவலூரைச் சோ்ந்த சுசித்ரா என்பவரின் வயல்பகுதியில் செவ்வாய்க்கிழமை மான் ஒன்று இறந்துகிடப்பதாக வருவாய்த் துறையினா் மற்றும் வனத்துறையினா்க்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனா்.

இதையடுத்து பொன்னமராவதி வனத் துறையினா் அப்பகுதிக்கு சென்று வாயில் காயத்துடன் இறந்துகிடந்த 3 வயது ஆண் மானை மீட்டு கால்நடை மருத்துவா்கள் மூலம் உடற்கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா். மேலும், வனப் பகுதியில் இருந்து தண்ணீா் தேடி வந்த இந்த மான் கீழே தவறி விழுந்து அடிபட்டதா அல்லது விபத்தில் சிக்கி உயிரிழந்ததா என விசாரித்து வருகின்றனா்.

Advertisement

இப்பகுதியில் உள்ள வனப்பகுதியிலிருந்து தண்ணீா் தேடி மான்கள் ஊருக்குள் செல்வதால் நாய்கள் கடித்தும், விபத்துகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. எனவே கோடைகாலத்தில் வனப்பகுதியில் மான்கள் நீரருந்த ஏற்பாடு செய்யவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.