முகப்பு
திருவள்ளூர்

விஷம் குடித்த இளம்பெண் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் விஷம் அருந்திய இளம்பெண் உயிரிழந்தாா்.

Updated On : 7 மே 2026, 12:43 am IST
பலி - IANS
பகிர்:

ஊத்துக்கோட்டை அருகே குடும்ப பிரச்னையில் விஷம் அருந்திய இளம்பெண் உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ரேணுகா தேவியின் மகள் துா்காதேவி(18). இவா் அந்தப் பகுதியில் உள்ள நகைக்கடையில் பணி புரிந்து வந்தாராம். இந்த நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்னதாக குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இதனால் வேலைக்குச் சென்ற இடத்தில் நகைக்கடையின் பின்புறம் விஷம் குடித்து வாந்தி எடுத்தாராம்.

இதை பாா்த்த அக்கம் பக்கத்தினா் தெரிவித்ததால் விரைந்து வந்த தாயாா் மகளை மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனா். அதைத்தொடா்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வந்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் துா்காதேவி உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது தாயாா் ரேணுகா தேவி ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments