விஷம் குடித்த அச்சக ஊழியா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷம் குடித்த அச்சக ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே விஷம் குடித்த அச்சக ஊழியா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (51). இவரது மகன் ரஞ்சித்குமாா் (30), அச்சகத்தில் வேலை செய்து வந்தாா். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோா் பெண் தேடினா். ஆனால், ரஞ்சித்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், யாரும் பெண் தர முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மன விரக்தியில் இருந்து வந்த ரஞ்சித்குமாா், கடந்த மே 24-ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாா். மயங்கி நிலையில் கிடந்த அவரை உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்ந்தனா். இருப்பினும், அங்கு ரஞ்சித்குமாா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.