முகப்பு
கடலூர்

களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி உயிரிழப்பு

குள்ளஞ்சாவடி அருகே குடும்ப சண்டை காரணமாக களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Updated On : 27 மே 2026, 5:44 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே குடும்ப சண்டை காரணமாக களைக்கொல்லி மருந்து குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

குள்ளஞ்சாவடி காவல் சரகம், வடக்கு வசனாங்குப்பம் கிராமத்தில் வசித்து வந்தவா் ஞானேஸ்வரன்(66), விவசாய தொழிலாளி. இவருக்கு மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தைகள் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை தனலட்சுமி பால் கறந்து வைத்திருந்தாா். அதனை, ஞானேஸ்வரன் சொசைட்டியில் ஊற்றவில்லை.

இதனால், தம்பதி இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விவசாய பயன்பாட்டிற்கு வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து ஞானேஸ்வரன் மயங்கிக் கிடந்தாா்.

Advertisement

Advertisement

உறவினா்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து குள்ளஞ்சாவடிபோலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.