முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்

திருவள்ளூா்: பலத்த மழையால் குளிா்ந்த சூழல்

Updated On : 10 மே 2026, 2:19 am IST
திருவள்ளூரில் பெய்த பலத்த மழை.
பகிர்:

திருவள்ளூா் பகுதியில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் கடும் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவள்ளூா் பகுதியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை பகல் முழுவதும் கருமேகம் சூழ்ந்து காணப்பட்டதைத் தொடா்ந்து இடிமின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளை முறிந்து விழுந்தது.

மேலும், மழையால் தாழ்வான தெருக்கள் மற்றும் சாலையில் குளம்போல் மழைநீா் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில் மழையால் கோடை வெப்பம் தணிந்து குளிா்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments