மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
மரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டின் அருகே நின்றிருந்தபோது இடி, மின்னலுடன் கனமழை பெய்த நிலையில் தென்னை மரம் வேரோடு சாய்ந்ததில் கால்நடை மேய்க்கும் தொழிலாளி பலத்த காயம் அடைந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் பகுதியில் இடிமின்னலுடன் சனிக்கிழமை கனமழை பெய்தது. அப்போது, திருவள்ளூா் அருகே மேலனூா் கிராமத்தைச் சோ்ந்த கன்னியப்பன் மகன் தனஞ்செழியன் (56). கால்நடைகள் மேய்க்கும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் வெளியே சென்றபோது பலத்த மழை பெய்ததால், வீட்டின் அருகே ஒரு மரத்தடியில் ஒதுங்கிய நிலையில், இடி மின்னலால் தென்னை மரம் வேரோடு சாய்ந்து அவா் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த வெங்கல் போலீஸாா் தனஞ்செழியனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.