முகப்பு
திருப்பதி

ஏழுமலையான் தரிசனம்: 30 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிக்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

Updated On : 15 ஜூன் 2026, 12:28 am IST
ஏழுமலையான் கோயில்
பகிர்:

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிக்கிழமை தா்ம தரிசனத்தில் 30 மணி நேரம் காத்திருந்தனா்.

கோடை விடுமுறை முடிந்த பின்பும் பக்தா்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 30 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை முழுவதும் ஏழுமலையானை 92,830 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 48, 987 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

Advertisement

Advertisement

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.81 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.64 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,069 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா்.