நெல் ஏற்றும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்
செங்கத்தில் நெல் ஏற்றும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கத்தில் நெல் ஏற்றும் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் பெங்களூர் சாலை திருவள்ளூவர் நகர் வரை அதிகமான நெல் மண்டிகள் உள்ளன. இந்த மண்டிகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக நெல் மூட்டைகளை எடுத்து வரும் விவசாயிகள் மூட்டைகளை திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அடுக்கி விடுகின்றனர்.
பின்னர், மாலை நேரத்தில் சாலையின் அருகில் லாரிகளை நிறுத்தி நெல் மூட்டைகள் ஏற்றுகின்றனர். இப்படி ஏற்றுவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கடந்த பத்து நாள்களாக தொடரும் இந்த நிலையால், நகர மக்கள், வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கம் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.