மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்
தண்டராம்பட்டு அருகே மணல் கடத்திய டிராக்டரை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு அருகே மணல் கடத்திய டிராக்டரை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் புதன்கிழமை அதிகாலை வட்டாட்சியர் சுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மணல் எடுத்து வந்த டிராக்டரை அதிகாரிகள் நிறுத்தினர். அதிகாரிகளைப் பார்த்து ஓட்டுநர் டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பிச்சென்றார்.
இதையடுத்து, மணலுடன் கூடிய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானாபுரம் காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.