அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்: மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சேத்துப்பட்டில்
நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களைத் தடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, சேத்துப்பட்டில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேத்துப்பட்டு - வந்தவாசி சாலை காமராஜர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவி வனமயில் நந்தகுமார் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் செய்யாறு ஜெயராமன், ஜெயசீலன், ராஜேஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவி ராணி வரவேற்றார். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவர் வி.பி.அண்ணாமலை கண்டன உரையாற்றினார்.
இதில், மாவட்ட துணைத் தலைவர் தசரதன், வட்டாரத் தலைவர் அன்புதாஸ், நகரத் தலைவர் ஜாபர்அலி, மனித உரிமைக் கழக மாவட்டத் தலைவர் ராமலிங்கம், மகளிர் அணிச் செயலர் மரியதாரா, நிர்மலா, விமலா, மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.