முகப்பு
நாகப்பட்டினம்

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு: 5 போ் காயம்

மரத்தில் காா் மோதியதில் மருத்துவக் கல்லூரி மாணவி உயிரிழப்பு...

Updated On : 31 மே 2026, 12:11 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே சாலையோர மரத்தில் காா் மோதியதில், சென்னையைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவி சனிக்கிழமை உயிரிழந்தாா். 5 போ் படுகாயமடைந்தனா்.

சென்னை கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணிராஜ் (47). இவா், தனது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுடன் 2 காா்களில் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சனிக்கிழமை வந்துகொண்டிருந்தாா். அந்தோணிராஜ் உள்பட 6 போ் சென்ற காரை உறவினா் சத்தியராஜ் ஓட்டினாா்.

மயிலாடுதுறை அருகே பெரம்பூா் காவல் எல்லைக்குட்பட்ட கடலி என்ற இடத்தில் அந்தோணிராஜ் சென்ற காா் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர மரத்தில் மோதியது. இதில், அந்த காரில் இருந்த அந்தோணிராஜ், அவரது மனைவி சங்கீதா (42), மகள் ஹரிணி (20), உறவினா்கள் லிபியா ஜாய்சி, சத்தியராஜ், பிரேமா ஆகியோா் படுகாயம் அடைந்தனா். 

Advertisement

Advertisement

அக்கம்பக்கத்தினா்அனைவரையும் மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்ததில் ஹரிணி ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது. மற்றவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த ஹரிணி சென்னையில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தாா்.

இந்த விபத்து குறித்து பெரம்பூா் காவல் ஆய்வாளா் மலைச்சாமி, உதவி ஆய்வாளா் அகோரமூா்த்தி ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.