முகப்பு
திருவண்ணாமலை

ஆதிதிராவிடர் சமுதாய ஏழைகள் இலவச வீட்டுமனைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள், இலவச வீட்டுமனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Updated On : 25 டிசம்பர் 2018, 9:55 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழைகள், இலவச வீட்டுமனை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் நிரந்தரமாக வசித்து வரும் வீடற்ற, வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வரும் ஏழை ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019 ஆம் நிதியாண்டுக்கு ரூ. 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியைப் பயன்படுத்தி இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட உள்ளது.
எனவே, வீட்டுமனை தேவைப்படும் நிலமற்ற, சொந்த வீடு இல்லாமல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராமப் பகுதியை அமைவிடமாகக் கொண்டு வசிக்கும் வீட்டுமனை தேவைப்படும் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த பயனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம்.
மேலும், ஆதிதிராவிடர் நலத் துறைக்கு அரசின் வழிகாட்டி மதிப்புத் தொகைக்கோ அல்லது மாவட்ட ஆட்சியரின் நேரடி பேச்சுவார்த்தையின் மூலம் நிர்ணயிக்கப்படும் தொகைக்கோ ஆதிதிராவிட நலத் துறைக்கு நிலம் வழங்க விருப்பம் உள்ள நில உரிமையாளர்களும் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளிக்கலாம் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments