செய்யாறு தொகுதி பாஜக கலந்தாய்வுக் கூட்டம்
செய்யாறு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
செய்யாறு தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் செய்யாறு நகர பாஜக தலைவர் ராஜகணபதி வரவேற்றார். கட்சியின் சட்டப்பேரவைத் தொகுதி அமைப்பாளர் ஆர்.மோகனம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சிவகாமி பரமசிவம் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடியின் பிரதான் மந்திரி யோஜனா திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் 161 சேவைத் திட்டங்கள், பிரதமர் கனவுத் திட்டமான ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், மலிவு விலை மருந்து திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து கட்சி நிர்வாகிகள் மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும்.
கட்சியின் கிளைத் தலைவர்கள் மக்களுடன் மக்களாக இணைந்து அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும். அப்போதுதான் ஓட்டு வங்கியை அதிகரிக்க முடியும் என்றார் அவர்.
கூட்டத்தில் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன், ஆரணி மக்களவைத் தொகுதிப் பொறுப்பாளர் தணிகாசலம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளர் செல்வேந்திரன், மாவட்டப் பொதுச் செயலர் ஜே.கே.சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர்கள் பன்னீர்செல்வம் சிவாசரவணன், அனக்காவூர் ஒன்றியத் தலைவர் சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.