சாதி அடையாளத்துடன் மாணவர்களுக்கு அடையாள அட்டையா? செங்கோட்டையன் மறுப்பு
மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது, "பள்ளிக்கல்வித் துறையும் வருவாய்த் துறையும் ஒன்றிணைந்து, டேட்டா என்ற முறையில் முகவரி, கல்வித் தகுதி, சான்றிதழ், ஆதார் அட்டையை க்யூஆர் கோடு மூலமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.
சாதிச் சான்றிதழைப் பொருத்தவரையில், கல்விக் கூடத்தில் ஆசிரியர்கள் கேட்கிற 10, 12 வகுப்புகளுக்கு மட்டும் சான்றிதழ் வழங்குவதற்கு துறையின் சார்பாக தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியும் தொடர்ந்து நடைபெறும். நாம் வழங்கும் டேட்டாவில் சாதி அடிப்படையில் இருக்காது.
Advertisement
Advertisement
ஏனெனில், பள்ளிகளில் கொடுத்துவிட்ட பிறகு டேட்டாவிலும் இடம்பெறக் கூடாது என்பதுதான் அரசின் நோக்கம். இது சாதி - மதங்களுக்கு அப்பாற்பட்ட இயக்கம்.
இந்த இயக்கத்தைப் பொருத்தவரையில், மாணவர்களின் நலன்கருதி, அவருடைய வாழ்க்கையில் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு, விபத்துகள் நேர்ந்தால், டேட்டாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிற முகவரியும் ஆதார் அட்டையும் இருக்குமேயானால், விபத்து நேர்ந்தவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணி ஆற்றுவதற்கும், வெளியூர் சென்று திரும்பும்போது உடனடியாக மற்றவருடன் தொடர்புகொள்வதற்கும் இது ஏதுவாக இருக்கும். இதை மட்டும்தான் நாங்கள் செய்யப் போகிறோம்.
சாதிச் சான்றிதழ்களை இணைக்கவிருப்பதாக சிலர் கூறுகின்றனர். அதுபோல சாதிச் சான்றிதழ்களை எப்போதும் இணைக்கப் போவதில்லை.
நாம் வழங்குபவற்றில் டேட்டா, ரத்தப் பிரிவு, ஆதார் அட்டை இருக்கும். இதனை வழங்கலாமா? என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறையும் வருவாய்த் துறையும் இணைந்து ஆய்வு செய்யவிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில், சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
Minister KA Sengottaiyan clarifies the issue of issuing identity cards containing caste details to students
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.