மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா
திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத் தமிழ்ச் சங்கத்தின் 7-ஆம் ஆண்டு தொடக்க விழா, "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூல் வெளியீட்டு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை கணேஷ் பன்னாட்டு உணவகத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தமிழ்ச் சங்க நிறுவனர் தலைவர் பா.இந்திரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தமிழ்ச் சங்கப் பொதுச் செயலர் ந.சண்முகம் வரவேற்றார். திருப்பூர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி எழுதிய "வள்ளலார் நமக்கு வழிகாட்டி' என்ற நூலை மாவட்ட தமிழ்ச் சங்கத் தலைவர் பா.இந்திரராஜன் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் த.மா.பிரகாஷ் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, மறைந்த தமிழ் அறிஞர்கள் பிரபஞ்சன், அ.ப.அறவாணன் ஆகியோர் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆய்வறிஞர் பி.கோ.கோவிந்தராஜன், புயல்மொழிப் புலவர் கோவிந்தசாமி, திருக்குறள் ராமசாமி, காமராஜ், முருகையன், கவிஞர் லதா பிரபுலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.