அரசுப் பள்ளி மாணவிக்குப் பாராட்டு
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்ற வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிக்கு தகுதி பெற்ற வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வந்தவாசியில் ஒன்றிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான சதுரங்கப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் மாணவி எம்.அர்ச்சனா கலந்து கொண்டு, மூன்றாமிடம் பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதையடுத்து, அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், அந்த பள்ளித் தலைமை ஆசிரியர்
க.ஜோதிபாபு மாணவி எம்.அர்ச்சனாவுக்கு பரிசு வழங்கி
பாராட்டிப் பேசினார். பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள்
உடனிருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.