முகப்பு
திருவண்ணாமலை

ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்: 3 பேர் கைது

ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 9:31 am IST
பகிர்:

ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தியதாக கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 வாணியம்பாடி டி.எஸ்.பி. முரளி தலைமையில் ஆய்வாளர் ராமச்சந்திரன், உதவி ஆய்வாளர் பிரகாசம் மற்றும் போலீஸார் கச்சேரி ரோடு வழியாக ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சார்-பதிவாளர் அலுவலகம் அருகே வேகமாக வந்த காரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் மடக்கி விசாரித்தனர்.
 அப்போது, காரில் இருந்தவர்கள் திடீரென தப்பியோட முயன்றபோது போலீஸார் அவர்களைப் பிடித்தனர். பிறகு காரில் சோதனை செய்ததில் 750 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக அதிக் (21), அனிஸ் (20), சாணவாஸ் (22) ஆகிய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
 இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் 3 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments