முகப்பு
திருவண்ணாமலை

எஸ்.வி.நகரம் பச்சையம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:16 am IST
பகிர்:

ஆரணியை அடுத்த எஸ்.வி. நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீமன்னார்சாமி சமேத பச்சையம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்றார்.
முன்னதாக, யாகசாலை பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. ராஜகோபுரம் மற்றும் அனைத்து சந்நிதிகளுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞர் க.சங்கர், பேரவை நகரச் செயலர் பாரி பி.பாபு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், பாசறை 
ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக் குழுவைச் சேர்ந்த மு.ந.ராமன், வேலாயுதம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.