ஆரணி அருகே புதிதாக கால்வாய் கட்ட பூமிபூஜை
ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.
ஆரணி தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாசம், வழக்குரைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.