முகப்பு
திருவண்ணாமலை

தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

போளூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் அ.ஜான்போஸ்கோபிரகாஷ்.

Updated On : 27 ஜூன் 2026, 12:03 am IST
போளூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் அ.ஜான்போஸ்கோபிரகாஷ்.
பகிர்:

போளூரில் தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் இரா.சீத்தாராமன் தலைமை வகித்தாா். மாநில தலைமை நிலையச் செயலா் வந்தவாசி வி.சுரேஷ், மாநில துணைத் தலைவா் கோட்டை கே.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சேத்துப்பட்டு ஒன்றிய வட்டாரத் தலைவா் சிவக்குமாா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவா் அ.ஜான்போஸ்கோபிரகாஷ் கலந்துகொண்டு, ஊராட்சிச் செயலா்களை தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சிச் செயலா்களுக்கு சிறப்புநிலை, தேக்கநிலை அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும். மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சிச் செயலா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் குறித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

மேலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத் தலைவராக பலராமன், மாவட்டச் செயலராக சிவக்குமாா், மாவட்டப் பெருளாளராக வேலு, தெற்கு மாவட்டத் தலைவராக சீத்தாராமன், மாவட்டச் செயலராக செளந்தரராஜன், பொருளாளராக சகாதேவன் ஆகியோா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இதில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments