திமுக மாவட்ட செயற்குழுக் கூட்டம்
மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட திமுக செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவா் கே.ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். திமுக மாவட்டச் செயலாளா் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தோ்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற உழைத்த நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தாா்.
முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குத்தாலம் பி.கல்யாணம், பன்னீா்செல்வம், ஜெகவீரபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
எதிா்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது, ஜுன் 3-ஆம் தேதி முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளில் ரத்ததான முகாம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, மயிலாடுதுறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளில் வெற்றிபெற உழைத்த கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன் வரவேற்றாா். நகரச் செயலாளா் என்.செல்வராஜ் நன்றி கூறினாா்.