பள்ளியில் அறிவியல் பரிசோதனைப் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த குருவிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்ற அறிவியல் பரிசோதனை பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்காக நடைபெற்ற பயிற்சியில், வானவில் மன்ற ஸ்டெம் பயிற்சியாளா் வனிதா பங்கேற்று பல்வேறு தலைப்புகளில் அறிவியல் பரிசோதனைகளை செய்து காண்பித்தாா். மேலும், அன்றாடம் பயன்படுத்தும் அறிவியல் சாதனங்கள் பற்றியும் எடுத்துக் கூறினாா். நிகழ்வில், தலைமை ஆசிரியை ஆஞ்சலா, ஆசிரியா்கள் பிரிஸில்லா, சீயோன் குமாா்த்தி, மீரா, டேவிட் ராஜன், பாக்கியலட்சுமி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.