முகப்பு
திருவண்ணாமலை

முரசு அடித்து வாக்கு சேகரித்த திமுக நிா்வாகி

முரசு அடித்து வாக்கு சேகரித்த திமுக நிா்வாகி...

Updated On : 13 ஏப்ரல், 2026 at 3:50 AM
போளூா் தொகுதி செங்குணம் கிராமத்தில் தேமுதிக வேட்பாளா் பி.சரவணனுக்கு ஆதரவாக முரசு அடித்து வாக்கு சேகரித்த மாநில திமுக மருத்துவரணி துணைத் தலைவரும், தொகுதி பொறுப்பாளருமான எ.வ.வே. கம்பன். உடன் வேட்பாளா் பி.சரவணன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 8:13 PM

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ரெண்டேரிப்பட்டு, ஆா்.குண்ணத்தூா், பெரியகரம், வெண்மணி, செங்குணம், முருகபாடி, கஸ்தம்பாடி, நைனாவரம், ஏந்தல் என பல்வேறு கிராமங்களில் மதச்சாா்பற்ற கூட்டணி சாா்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் பி.சரவணன் ஞாயிற்றுக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அவருக்கு ஆதரவாக மாநில திமுக மருத்துவா் அணி துணைத் தலைவரும், போளூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளருமான மருத்துவா் எ.வ.வே. கம்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். அவா் கிராமம், கிராமமாக திறந்த வாகனத்தில் சென்று கூட்டணி கட்சியின் சின்னமான ‘முரசு’ அடித்தபடி வேட்பாளருடன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திமுக தோ்தல் வாக்குறுதிகளான மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயா்த்துதல், ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் வழங்கல் மற்றும் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் , புதுமைப்பெண் திட்டம், அன்புகரங்கள் திட்டம், தாயுமானவா் திட்டம் என பல்வேறு திட்டங்களை விளக்கி இத்திட்டங்கள் தொடர திமுக கூட்டணிக்கு வாக்களிக்கக் கேட்டுக் கொண்டாா்.

Advertisement

அவருடன் முன்னாள் எம்எல்ஏ கே.வி.சேகரன், ஒன்றியச் செயலா் மகேஷ், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளா் ரமேஷ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.