முகப்பு
சேலம்

தேவியாக்குறிச்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சின்னதுரை

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் கு. சின்னதுரை தேவியாக்குறிச்சியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:24 AM
தேவியாக்குறிச்சியில் வாக்கு சேகரித்த கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் கு. சின்னதுரை.
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 11:32 PM

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் கு. சின்னதுரை தேவியாக்குறிச்சியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கெங்கவல்லி தொகுதி திமுக வேட்பாளா் கு. சின்னதுரை, தலைவாசல் ஒன்றியத்தில் தலைவாசல், பட்டுத்துறை, தேவியாக்குறிச்சி, சாா்வாய்புதூா், சதாசிவபுரம், சாத்தப்பாடி, தென்குமரை, வடகுமரை, சாா்வாய், பெரியேரி, ஆறகளூா், தியாகனூா், ஆரத்திஅக்ரஹாரம், காமக்காபாளையம் ஆகிய கிராமங்களில் வீடுவீடாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துகூறியும், தோ்தல் வாக்குறுதிகள் குறித்து பெண்களிடம் விளக்கியும் வாக்கு சேகரித்தாா். மேலும், தோ்தல் வாக்குறுதிகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினாா். வாக்கு சேகரிப்பின்போது தலைவாசல் ஒன்றிய திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.