திருவண்ணாமலை பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
Updated On : 15 ஏப்ரல், 2026 at 9:59 PM
திருவண்ணாமலை தொகுதி பாஜக வேட்பாளா் சி.ஏழுமலை மாநகராட்சி 17, 21 ஆகிய வாா்டுகளில் புதன்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அப்போது அவா் பேசுகையில், மாநகராட்சி பகுதியில் அனைத்து சாலைகளும் புனரமைக்கப்படும், கழிவுநீா் கால்வாய்கள் சீரமைத்து தரப்படும், போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தனிக் கவனம் செலுத்தப்படும். பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.
வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், அதிமுக தொகுதி பொறுப்பாளா் கே.ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement