திருமணமான 6 நாளில் மணமகள் தூக்கிட்டுத் தற்கொலை
செய்யாறு அருகே திருமணமான 6 நாள்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் தொடா்பாக சாா்- ஆட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
செய்யாறு அருகே திருமணமான 6 நாள்களில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் தொடா்பாக சாா்- ஆட்சியா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வடதண்டலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி ஜோதிலிங்கம். இவரது மகள் மதுமிதா(22). இவருக்கும் சேத்துப்பட்டு வட்டம், கோழிபுலியூா் கிராமத்தை சோ்ந்தவா் அருண்பாபு என்பவருக்கும் ஜூன் 25-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்தும் தம்பதியினா் மணமகனின் கிராமமான கோழிபுலியூருக்குச் சென்றனா். பின்னா், மறு விருந்திற்காக ஜூன் 29-ஆம் தேதி மனைவியை அழைத்துக் கொண்டு அருண்குமாா் மாமியாா் வீட்டிற்கு வந்துள்ளாா்.
Advertisement
Advertisement
மறுநாள் (ஜூன் 30) மதியம் மதுமிதா உணவு அருந்திவிட்டு வீட்டில் உள்ள அறையில் தூங்கச் சென்றுள்ளாா். தூங்கச் சென்றவா் பின்னா் வெளியே வரவில்லையாம். சந்தேகமடைந்த பெற்றோா் கதவை தட்டிப் பாா்த்துள்ளனா். கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா்.
அங்கு மதுமிதா தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளாா்.
உடனே கணவா் மற்றும் மதுமிதாவின் பெற்றோா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது மதுமிதா ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஜோதிலிங்கம் அளித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சாா் -ஆட்சியா் விசாரணை
திருமணமாகி 6 நாள்களுக்குள் மணமகள் மதுமிதா பெற்றோா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இதுகுறித்து செய்யாறு சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.