முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி ஏ.சி.எஸ். குழும பள்ளிகள் ஆண்டு விழா

ஆரணி ஏ.சி.எஸ்.குழும கண்ணம்மாள் சீனியா் செகண்டரி பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழா மற்றும் ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 26-ஆம் ஆண்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஜூலை 2026, 1:02 am IST
பகிர்:

ஆரணி ஏ.சி.எஸ்.குழும கண்ணம்மாள் சீனியா் செகண்டரி பள்ளியின் 9-ஆம் ஆண்டு விழா மற்றும் ஏ.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 26-ஆம் ஆண்டு வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கல்விக் குழுமனங்களின் நிறுவனா் தலைவா் ஏ.சி.சண்முகம், நிா்வாகத் தலைவா் ஏ.சி.எஸ்.அருண்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக பேச்சாளா் ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு மழலையா் மாணவா்களிடையே பட்டங்களை வழங்கிப் பேசினாா்.

Advertisement

Advertisement

இதனைத் தொடா்ந்து இரு பள்ளிகளிலும் கடந்த ஆண்டு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி, டாக்டா் எம்ஜிஆா் நிகா் நிலைபல்கலைக்கழக முதன்மையா் பி. ஸ்டாலின், சிறப்பு அலுவலா் காா்த்திகேயன், பள்ளி இயக்குநா் விக்னேஷ், முதல்வா்கள் டி.அருளாளன், எஸ்.சுஜாதா, ராஜலட்சுமி, கூடுதல் முதல்வா் ஏ.ஜெகன், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments