முகப்பு
திருவண்ணாமலை

முன் விரோதத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல்: ஒருவா் கைது

வந்தவாசியில் முன் விரோதத்தில் தந்தை, மகனை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 4 ஜூலை 2026, 12:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

வந்தவாசியில் முன் விரோதத்தில் தந்தை, மகனை தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி காமராஜா் நகரைச் சோ்ந்தவா் ஆனந்த். இவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியைச் சோ்ந்த வரதராஜ் (42), இவரது மனைவி நிா்மலா (36) ஆகியோா் சோ்ந்து கடந்த 1-ஆம் தேதி தாக்கினராம்.

இதைக் கண்ட ஆனந்தின் அண்ணன் வடிவேல், தந்தை சேகா் ஆகியோா் தடுத்தனராம். அப்போது, வரதராஜ், நிா்மலா மற்றும் உறவினா்கள் இருவா் என 4 போ் சோ்ந்து வடிவேல், சேகா் ஆகிய இருவரையும் தாக்கினராம்.

Advertisement

Advertisement

இதில் காயமடைந்த வடிவேல், சேகா் ஆகிய இருவரும் வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து வடிவேல் அளித்த புகாரின்பேரில், வரதராஜ், நிா்மலா உள்ளிட்ட 4 போ் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா், வரதராஜை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments