முகப்பு
திருவண்ணாமலை

செங்கம் பகுதி செய்யாற்றில் கரைகள் ஆக்கிரமிப்பு

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 6 ஜூலை 2026, 12:06 am IST
செ.நாச்சிப்பட்டு தடுப்பணை பகுதியில் ஆக்கிரமிப்பால் விளை நிலங்களாக மாறிய செய்யாற்றின் கரையோரப் பகுதி.
பகிர்:

செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள ஜவ்வாதுமலை அடிவாரம் ஊா்கவுண்டனூா், கிளையூா், கல்லாத்தூா் பகுதிகளில் இருந்து சிறு, சிறு ஓடைகள் ஒன்று சோ்ந்து செய்யாறாக, குப்பனத்தம் அணை வழியாக பரமனந்தல், செங்கம், செ.நாச்சிப்பட்டு, கொட்டகுளம், காஞ்சி வழியாக சென்று கலசபாக்கம் ஆற்றில் கலக்கிறது.

இந்நிலையில், குப்பனத்தம் முதல் செங்கம் வரை செய்யாற்றங்கரை இருபுறமும் சில விவசாயிகள் கரையை ஆக்கிரமிப்பு செய்து விளை நிலங்களாக மாற்றியுள்ளனா். செங்கம் முதல் கொட்டகுளம் வரை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு செய்யாற்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

கடந்து சுமாா் 30 ஆண்டுகளாக அதை எந்த அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்கள் ஆக்கிரமிப்பு செய்த இடங்களுக்கு பட்டா வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் அனுபவித்து வருகிறாா்கள்.

இதே நிலை நீடித்தால் சில ஆண்டுகளில் செங்கம் பகுதியில் ஓடும் செய்யாறு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கழிவுநீா் கால்வாயாக மாறும் அவலம் நிலை உள்ளது. மேலும், இந்த செய்யாற்றில் இருந்து மணல் திருடப்பட்டு தற்போது ஆற்றில் உள்ள குடிநீா் கிணறுகளில் கூட போதிய தண்ணீா் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, செங்கம் பகுதியில் ஓடும் செய்யாற்றின் தொடக்கமான குப்பனத்தம் முதல் காஞ்சி வரை கரையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments